என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சேலம் தபால் நிலையம்"
சேலம்:
சேலம் கிழக்கு கோட்டம் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள் மத்திய அரசால் தொடங்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகின்றன.
சேலம் கிழக்கு கோட்டத்திற்குட்பட்ட தபால் அலுவலகங்களான அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி, ஏற்காடு, செவ்வாய்ப்பேட்டை, அழகாபுரம், வாழப்பாடி, கெங்கவல்லி, வீரகனூர், தலைவாசல், சேலம் தலைமை தபால் நிலையம், ஆத்தூர் தலைமை தபால் நிலையம் உள்பட 44 அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல் படுகிறது.
சேவை மையங்களில் பொதுமக்கள் இலவசமாக புதிய ஆதார் அட்டைக்கு பதிவு செய்து கொள்ளலாம். ரூ. 30 கட்டணம் செலுத்தி தங்கள் ஆதார் அட்டையில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.
இதுமட்டுமல்லாமல் உரிய கட்டணம் செலுத்தி ஆதார் அட்டையின் நகல் பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி தங்களுக்கு தேவையான ஆதார் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.